மத நல்லிணக்க அன்னதான விழா நத்தம் மாரியம்மன் கோயிலில்

நத்தம், மார்ச் 11: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவையொட்டி நேற்று பூக்குழி திருவிழா நடந்தது. இதைதொடர்ந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நத்தம் பெரிய விநாயகர் கோயில் திடலில் அறுசுவை உணவு அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. வேம்பார்பட்டி அரசு மேல்நிலைபள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் கண்ணுமுகமது தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில வர்த்தகர்கள் சங்க தலைவர் சேக்ஒலி, சட்ட ஆலோசகர் சேக்சிக்கந்தர் பாட்சா, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அன்னதான கமிட்டி தலைவர் ஏர்வாடி முகமது இஸ்மாயில் வரவேற்றார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அறுசுவை உணவு அன்னதானம் அருந்தினர். விழாவில் சிறுகுடி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆசை அலங்காரம், வேம்பார்பட்டி அபுதாகிர், ஜான்பீட்டர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் வந்திருந்து கலந்து கொண்டனர். சின்ராஜ் மீரான் நன்றி கூறினார். ஏற்பாடுகளை அன்னதான கமிட்டியை சேர்ந்த நிர்வாகிகள் சிவாஜி, கோபாலகிருஷ்ணன், மோகன், ரவீந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories: