வத்தலக்குண்டுவில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தர்ணா

வத்தலக்குண்டு, மார்ச் 11: வத்தலக்குண்டுவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்தது நில், போராடு தொடர் தர்ணா நடந்தது. வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் அருகே நடந்த தொடர் தர்ணா நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நகர செயலாளர் சேக்முகமது தலைமை வகித்தார். கணவாய்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் நாகூர்அனிபா வரவேற்றார். அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வீரர்அப்துல்லா, மமக மாவட்ட துணை செயலாளர் கணவாபீர், அமமுக தலைமை கழக பேச்சாளர் நசீம், தமுமுக மாவட்ட பொறுப்பாளர் முகமதுரிஜால், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட துணை தலைவர் பவுசூர்ரகுமான், இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகி இஸ்மாயில், அமமுக பொறுப்பாளர் மியாக்கனி உள்பட பலர் பேசினர். தமுமுக மாவட்ட துணை செயலாளர் சையது இப்ராஹீம், தமுமுக நகர தலைவர் இம்தியாஸ், மமக நகர செயலாளர் அலாவுதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். எஸ்.டி.பி.ஐ கட்சி கிளை தலைவர் சையதுசுல்தான் நன்றி கூறினார்.

Related Stories: