ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிதியுதவி

ஊட்டி, மார்ச் 11:  ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த கூடலூர் தேவாலா பகுதியை சேர்ந்த ராஜேஷின் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.  ஊட்டியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில், குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 208 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் கூடலூர் தேவாலா பகுதி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த ராஜேஷின் பெற்றோருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, தமிழ்நாடு மாநில ஊரக  திட்ட அலுவலர் பாபு, தனித்துணை ஆட்சியர் கண்ணன், உதவி ஆணையர் பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: