நிலமோசடி புகாருக்கு ஒப்புகை சீட்டு அவசியம்

புதுச்சேரி, மார்ச் 10: நிலமோசடி தொடர்பான புகார்களை பெற்றவுடன் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் எனவும், புகார்தாரர் குறிப்பிட்ட இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். நில மோசடி தொடர்பான புகார்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பாக ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அருண், நில மோசடி தொடர்பான விவரங்களை எடுத்துரைத்தார்.தொடர்ந்து நிலமோசடி தொடர்பான புகார் தருவதில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை தொடர்பாக ஆட்சியர், தமிழில் விவரங்களை வெளியிட வேண்டும். நில மோசடி புகார்களை கையாளுவது தொடர்பாக போலீசாருக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த பயிற்சி தர வேண்டும்.நிலமோசடி தொடர்பாக புகார் தருவோருக்கு அவர்களிடம் மனு பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை சீட்டு தரவேண்டும். புகாரில் குறிப்பிட்டுள்ள இடத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும். தற்போதைய நிலை தொடர்பாக பேசவும் வேண்டும். அவை அனைத்தும் பதிவு செய்ய வேண்டும். நிலமோசடி தொடர்பான புகார்களை ஒருங்கிணைந்து இதுதொடர்பான ஆலோசனைக்குழுவின் கீழ் கொண்டு வரவேண்டும். இதற்கான தனி வாட்ஸ்அப் குழு அமைக்கவேண்டுமென கிரண்பேடி  உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: