திருவண்ணாமலையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 14ம் தேதி நடக்கிறது

திருவண்ணாமலை, மார்ச் 10: திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 14ம் தேதி நடக்கிறது.திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி இணைந்து படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கல்வி தகுதிகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் நோக்குடன் முகாம் நடத்த உள்ளது.அதன்படி, வருகிற 14ம் தேதி காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளுக்கு அவர்களது பதிவு மூப்பின்படி அரசு பணிக்கு பரிந்துரைக்கப்படும்.எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பிஇ, நர்சிங் கல்வித் தகுதியுடையவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.ncs.gov.in என்ற இணையதள முகவரியில் வேலை தேடுபவர்கள் பகுதியில், திருவண்ணாமலை மாவட்டத்தை தேர்வு செய்வு ஆன் லைன் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும.மேலும், விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: