திருவண்ணாமலை, மார்ச் 10: திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் நாளை போர்மன்னன் லிங்கேஸ்வரர் தேர் திருவிழா நடக்கிறது.திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற போர்மன்னன் லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் சார்பாக ஆண்டு தோறும் மாசி மகத்தன்று திருவிழா தொடங்கி, 4ம் நாள் போர்மன்னன் லிங்கேஸ்வரர் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி 188ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக கடந்த 7ம் தேதி இரவு விநாயகர் ஊர்வலத்துடன் தொடங்கியது. அன்று இரவு சினிமா திரைப்பட நடிகர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2ம் நாளான நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.