திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

புதுச்சேரி, மார்ச் 6:  புதுச்சேரி மீன்வளத்துறையின் பிம்சூல்-2 திட்டத்தின் கீழ் அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், ம.சா.சுவாமி

நாதன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கிராம அளவிலான கூட்டு மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் நடந்தது.

ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளர்ச்சி இணைப்பாளர் இளங்கோவன் வரவேற்றார். மீன்வளத்துறை இயக்குநர் முனிசாமி திறன் மேம்பாட்டு பயிற்சியினை துவக்கி வைத்தார். இணை இயக்குநர் தெய்வசிகாமணி பிம்சூல்-2 திட்டத்தின் நோக்கம் மற்றும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி வேல்விழி மூன்றடுக்கு கூட்டு மேலாண்மை குழுவின் பணிகள் குறித்து எடுத்துரைத்தார். குறிப்பாக, கிராமம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான மேலாண்மை குழுக்களின் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

பயிற்சியாளர் முகமது காசிம் கூட்டு மேலாண்மை குழுவின் நன்மைகள், பயன்கள் மற்றும் அவற்றில் மீனவர்களுக்கான பொறுப்புகள் சம்பந்தமாக விளக்கி கூறினார். மேலும், கூட்டு மேலாண்மை குழுவில் யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை மேற்கோள்காட்டி விளக்கம் அளித்தார். இதில் துணை இயக்குநர்கள் தனசேகரன், இளையபெருமாள், உதவி இயக்குநர் சாஜிமா, ஆய்வாளர் செய்தில்குமார், உதவி ஆய்வாளர்கள் மற்றும் கனகசெட்டிகுளம், வைத்திக்குப்பம், சின்ன வீராம்பட்டினம், புதுக்குப்பம், நரம்பை மற்றும் மூர்த்திகுப்பம், புதுக்குப்பம் ஆகிய

மீனவ கிராமங்களை சேர்ந்த கூட்டு மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செல்வகணபதி, சரவணன், லூர்துசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: