ஒட்டன்சத்திரத்தில் வீட்டை உடைத்து நகை திருடியவர்கள் கைது 5 மாதத்திற்கு பின் சிக்கினர்

ஒட்டன்சத்திரம், மார்ச் 5: ஒட்டன்சத்திரத்தில் வீட்டை உடைத்து 12 பவுன் நகைககளை திருடிய 2 பேரை போலீசார் 5 மாதத்திற்கு பின் கைது செய்தனர்.ஒட்டன்சத்திரம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் அம்சவேணி. இவர் கடந்த 2019ம் ஆண்டு செப்.4ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார். அடுத்தநாள் காலையில் வந்து பார்த்த போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 12 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரிவந்தது. இதுகுறித்து அம்சவேணி அளித்த புகாரின்பேரில் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார், இவ்வழக்கு தொடர்பாக திருப்பூரில் 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் வேடசந்தூர் சின்னமவுத்தான்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் திருமூர்த்தி (27), பழநியை சேர்ந்த அய்யாச்சாமி மகன் ராஜரத்தினம் (35) என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில் அம்சவேணி வீட்டில் நகை திருடியவர்கள் என்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 12 பவுன் நகையை மீட்டனர்.

Related Stories: