காங்கயம் பி.ஏ.பி. வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு

காங்கயம், மார்ச் 4: காங்கயம் பி.ஏ.பி. வாய்க்காலில் சுமார் 35 வயதுள்ள பெண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து காங்கயம் போலீசார் திருப்பூர் ரோடு வாய்க்கால் மேடு பகுதிக்கு சென்று பெண் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் யார்? எந்த ஊர்? எப்படி வாய்க்காலில் விழுந்தார்? என்ற விபரம் தெரியவில்லை. அந்த பெண்ணின் கையில் மோகன் என்று பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பெண் சடலம் காங்கயம் அரசு மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளது.   மேலும் இந்த பெண் நேற்று காலைதான் தண்ணீரில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது பற்றி காங்கயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: