காஞ்சி காமாட்சி கோயில் பிரம்மோற்சவம் தங்க சூரிய பிரபையில் அம்மன் 4ம் நாள் வீதியுலா

காஞ்சிபுரம், மார்ச் 3:  காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம், கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தங்க மான், சந்திரப்பிரபை, யானை, ஹம்ஸ வாகனம், நாகம், தங்கக் கிளி, குதிரை, வெள்ளிரதம், தங்க சிம்மம், சூரிய பிரபை, தங்க பல்லக்கு, முத்து சப்பரம், சரபம் ஆகிய வாகனங்களில் காமாட்சி அம்மன் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில், காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான நேற்று காமாட்சி அம்மன் தங்க சூரிய பிரபையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  அப்போது ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) தியாகராஜன், கோயில் நிர்வாக அலுவலர் நாராயணன், பரம்பரை தர்மகர்த்தாவின் கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பாக்ஸ் பக்தர்கள் அதிர்ச்சி நேற்று காலை காமாட்சி அம்மன், தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா வந்தார். அப்போது, கச்சபேஸ்வரர் கோயில் அருகே அம்மனுக்கு எடுத்துவரும் குடை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நேரத்தில், அம்மனை தூக்கிவரும் தண்டு (கொம்பு ) எதிர்பாராதவிதமாக முறிந்தது. இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து மாற்று தண்டு கொண்டு வரப்பட்டு, சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின் சிரமைக்கப்பட்டு காமாட்சி அம்மன வீதியுலா தொடர்ந்தது. பிரம்மோற்சவத்தில் அம்மனை தூக்கிவரும் தண்டு உடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த தண்டு புதிதாக, அரச மரத்தில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திடீரென தண்டு முறிந்ததால், அனைவரும் கலக்கம் அடைந்தனர்.

Related Stories: