டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் பிஎஸ்எப் வீரர் கத்தியால் குத்திக்கொலை: n 4 பேர் கைது n வாலாஜாபாத் அருகே பரபரப்பு

வாலாஜாபாத், ஜூன் 12: வாலாஜாபாத் அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் பிஎஸ்எப் வீரர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாலாஜாபாத் அடுத்த ஏரிவாய் கிராமத்தை சேர்ந்தவர் கனகசபாபதி (25). இவர், எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் வீட்டிலிருந்த கனகசபாபதி, கடந்த ஞாயிற்றுகிழமை தனது நண்பரான ஏகாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (25) என்பவருடன் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார்.

பின்னர், 2 பேரும் வாலாஜாபாத் அடுத்து ஊத்துக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்குவதற்காக சென்றனர். அப்போது, அங்கிருந்த முதியவருக்கும், ஆனந்தராஜூக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கை கலப்பாக மாறியது. இதனைகண்ட, அக்கம் பக்கத்தினர் முதியவருக்கு தெரிந்தவர்கள் என்பதால், அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆனந்தராஜை தாக்கினர். நண்பனை தாக்குவதை கண்ட கனகசபாபதி, அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறினை தடுக்க முற்பட்டார். அப்போது, ஆனந்தராஜ் அங்கிருந்து தப்பிச் ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள், கனகசபாபதியை கடுமையாக தாக்கி, கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, கனகசபாபதி அங்கிருந்து தப்பித்து சென்று ஆனந்தராஜூயுடன் பைக்கில், புத்தகரம் சாலையில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, பைக்கினை ஓட்டிச்சென்ற கனகசபாபதி, திடீரென மயங்கி சாலையையொட்டி உள்ள வீட்டின் மதில் சுவரின் மீது பைக் அதிவேகமாக மோதியது. இதில், ஆனந்தராஜூக்கு லேசான காயமும், கனகசபாபதி மயங்கி கீழே விழுந்தார். இதனைகண்ட அக்கம் பக்கத்தினர், மயங்கிய நிலையில் கிடந்த கனகசபாபதியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கனகசபாபதி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வாலாஜாபாத் போலீசார், கனகசபாபதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையின் வெளியே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், நாயக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (40), அருண் (35), ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த பழனி (44), வெங்கடேஷன் (35). ஆகியோர் ஒன்றாக சேர்ந்து கனகசபாபதி, ஆனந்தராஜ் ஆகியோரை தாக்கியதும், இதில் பலத்த காயமடைந்த கனகசபாபதி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, 4 குற்றவாளிகளையும் கைது செய்த போலீசார், அவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் பிஎஸ்எப் வீரர் கத்தியால் குத்திக்கொலை: n 4 பேர் கைது n வாலாஜாபாத் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: