திசையன்விளை விஎஸ்ஆர் பள்ளியில் அறிவியல் தினம்

திசையன்விளை, மார்ச் 3:  திசையன்விளை வி.எஸ்.ஆர்.இன்டர்நேசனல் பள்ளியில் அறிவியல் தின கொண்டாட்டம் நடந்தது. அறிவியல் வளர்ச்சி இன்றைய உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்தும், தொழில்துறை, மருத்துவதுறை, கல்வித்துறை மற்றும் அனைத்து துறைகளிலும் அறிவியல் வளர்ச்சியின் ஆதிக்கம் குறித்தும் மாணவ மாணவிகள் குறுநாடகம் நடித்து காண்பித்தனர். அறிவியல் சார்ந்த பொது அறிவு வினாக்களுக்கு மாணவர்கள் பதில் அளித்தனர். அறிவியல் வளர்ச்சியால் சுற்றுப்புற சூழல் தூய்மை கேடு குறித்தும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அறிவியலை ஆக்கப்பூர்வமான நன்மைக்கே பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்போம் என மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

Related Stories: