நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா ‘ஹிலாரியஸ் - 2020’

ஈரோடு, மார் 3:  ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியின்   ‘ஹிலாரியஸ் -2020’ ஆண்டு விழா அக்கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், திருப்பூர் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் செயலர் நாராயணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், நடந்து முடிந்த வாரியத்தேர்வு மற்றும் கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.  இதையடுத்து, பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினரான கலந்து கொண்ட கதிரவன் பேசுகையில், விடாமுயற்சியை பற்றியும், காலத்தின் முக்கியத்துவத்ைத பற்றியும் விவரித்தார். மரணம் சிறிது நேரத்தில் தன்னை ஆட்கொள்ளும்  என தெரிந்தும் விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் புத்தகத்தை படித்து முடிக்க ஆவலாக இருந்தபோது  வாழப்போகிற நாம்  புத்தகங்கள்  படிப்பதில் ஆர்வம் கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.

Related Stories: