தங்கப்பழம் பாலிடெக்னிக் என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

நெல்லை, பிப். 28: வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், சங்கனாப்பேரி பஞ்சாயத்தில் 7 நாட்கள் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது. தங்கப்பழம் கல்வி குழும தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் காந்திராமன் முன்னிலை வகித்தார். முகாமில் பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்கள், வாசுதேவநல்லூர் மருத்துவ அலுவலர் சாந்தி சரவணா பாய் தலைமையில் பொது மருத்துவ முகாம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நெற்கட்டும்செவல் கால்நடை மருத்துவர் அருண்குமார் தலைமையில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் கால்நடை நோய் தடுப்பு மற்றும் கிருமிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவர்களுக்கான காடு வளர்ப்பு மற்றும் காற்றுத்தீ தடுத்தல், வேளாண்மை வளர்ப்பு தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கான பயிற்சி, பெண்களுக்கான சுய உதவிக்குழு, மரம் நடுதல் மற்றும் மரம் வளர்ப்புக்கான விழிப்புணர்வு கூட்டங்களும் நடந்தது. சகாயம் துவக்கப் பள்ளிக்கு குடிநீர் தேக்கத் தொட்டி அமைத்துக் கொடுக்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் என்எஸ்எஸ் அலுவலர் குருபிரசாத் மற்றும் ஆசிரியர்கள், துறை தலைவர்கள், ஆசிரியர் அல்லாத மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: