நாராயணசாமி, நமச்சிவாயம் டெல்லி பயணம்

புதுச்சேரி, பிப். 28: புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மனையியல் துறையின் கீழ் இயங்கி வரும் மழலையர் பள்ளி சார்பில் 4வது மாநில அளவிலான மழலையர் பள்ளி சந்திப்பு போட்டி நேற்று துவங்கியது. கல்லூரி முதல்வர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மனையியல் துறை தலைவர் ராஜி சுகுமார், பேராசிரியை ஜோஸ்பின் நிர்மலா மணி ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இப்போட்டிகள் 2 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று மழலையர் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் மாறுவேடம், ரங்கோலி, பானைக்கு வண்ணம் தீட்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று இந்திய கலாசார பழங்குடியினர் நடனம், பூக்களை வைத்து அணிகலன்கள் செய்வது, இடையீட்டு ெராட்டி செய்தல் ஆகிய போட்டிகள் நடக்கிறது.

 இதில் புதுச்சேரியில் உள்ள 18 பள்ளிகளிலிருந்து 125 குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு சரிவிகித உணவு பற்றிய அவசியத்தை உணர்த்தும் வகையில் அவர்களுக்கு காய்கறி, கனிகள் போன்றவை கொடுக்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு மார்ச் 5ம் தேதியன்று நடைபெறும் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மழலையர் பள்ளி ஆசிரியர்கள் ஜெரால்டின், கவிதா, மனையியல் துறை பேராசிரியர்கள் ஆஷா, ரஜினி சனோலின் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: