கோமாரி தடுப்பு கிராம சபை கூட்டம்

சிங்கம்புணரி, பிப்.27: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் சமுதாய கூடத்தில் கால்நடைகளுக்கு உருவாகும் கோமாரி நோய் தடுப்பு முறைகள் மற்றும் தடுப்பூசி குறித்து சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமை வகித்தார். கோமாரி நோய் தடுப்பு முறைகள் பற்றி கால்நடை மருத்துவர் தியாகராஜன் பொது மக்களிடம் விளக்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயசூர்யா ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் கலந்துகொண்டார். ஊராட்சி மன்றத் துணை தலைவர் சித்ரா அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி செயலர் செல்வம், ஊராட்சி உறுப்பினர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள், சுய உதவிக் குழுக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: