தொழில் திறன் பயிலரங்கம் நாளை ஊட்டியில் நடக்கிறது

ஊட்டி, பிப். 27: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில் திறன் பயிலரங்கம் நாளை ஊட்டியில் நடக்கிறது.  இத குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேல் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு தொழில் திறன் பயிலரங்கம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஊட்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 28ம் தேதி தொழில் திறன் பயிலரங்கம் ஊட்டியில் நடக்கிறது. இதில் குன்னூர் அரசு ஐ.டி.ஐ, கூடலூர் அர்ச்சனா இன்ஸ்டியூட் ஆப் பேசன் டிசைனிங், கோத்தகிரி அம்மன் ஐ.டி.ஐ, ஊட்டி சமூக சேவா மையம், ஊட்டி ஸ்டெர்லிங் ஓட்டல் மேனேஜ்மேன்ட் பயிற்சி மையம், ஈரோடு திறன் மேம்பாட்டு கழகம், ஊட்டி ஆறுதல் பவுண்டேசன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

 இதில் திறன் பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள், திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் பல்வேறு இலவச பயிற்சிகள், தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கான அரசு திட்டங்கள் போன்ற பல்வேறு முக்கிய தலைப்புகளில் சிறப்புரைகள் துறை வல்லுனர்களால் அளிக்கப்பட உள்ளது. இம்முகாமில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் பெற்று கொள்ளலாம். எனவே தகுதியுள்ள படித்த இளைஞர்கள் கலந்து ெகாண்டு பயன்பெறலாம். இவ்வாறு வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேல் தெரிவித்துள்ளார்.

Related Stories: