முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி

ஊட்டி, பிப். 27: முதுமலை  பகுதிகளில் வனங்கள் காய்ந்து போயுள்ளதால், வன விலங்குகள் நீர் நிலைகளை  தேடியும், மக்கள் வாழும் பகுதிகளை நோக்கி இடம் பெயரத் துவங்கியுள்ளன. முதுமலை  புலிகள் சரணாலயம், நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட சிறியூர், சிங்காரா,  மசினகுடி, தெங்குமரஹாடா, ஆனைக்கட்டி மற்றும் பொக்காபுரம் ஆகிய  வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கட்டெருமை உட்பட பல்வேறு வன  விலங்குகள் உள்ளன. மேலும் தேக்கு, ஈட்டி மற்றும் மூங்கில் போன்ற விலை  உயர்ந்த மரங்களும் அதிகளவு உள்ளன. கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி  மாதம் முதல் கொட்டிய பனியால் இந்த வனங்களில் உள்ள புற்கள், செடி கொடிகள்  மற்றும் புதர்கள் அனைத்தும் கருகி காய்ந்து போயுள்ளன.

 மேலும்,  பெரும்பாலான நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகள் ஆகியன காய்ந்து  போயுள்ளன. இதனால், இங்கு வாழும் வன விலங்குகளுக்கு போதிய உணவு கிடைக்காமல்  தற்போது நீர் நிலைகளை தேடியும், உணவை தேடியும் அலைகின்றன. மான் மற்றும்  காட்டுபன்றி போன்றவைகள் மக்கள் வாழும் பகுதிகளை முற்றுகையிட்டுள்ளன.  தொடர்ந்து முதுமலை, மசினகுடி போன்ற பகுதிகளில் மழை பெய்யாமல் உள்ளதால்,  மேலும் வறட்சி ஏற்பட்டு விலங்குகள் தண்ணீருக்காக கடும் அவதிப்படும் நிலை  நீடிக்கிறது. அதே போல் காட்டு தீ ஏற்படும் அபாயமும் நீடிக்கிறது.

Related Stories: