கவர்னர் மாளிகை முன் 9ம் தேதி முதல் தொடர் தர்ணா போராட்டம்

புதுச்சேரி, பிப். 27: ஏஐடியூசி புதுச்சேரி வட்டார கைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் பெத்துச்செட்டிபேட்டையில் உள்ள சுப்பையா படிப்பகத்தில் நடந்தது. சங்க செயலாளர் ரவிச்சந்திரன் நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினார். ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் சங்கத்தின் எதிர்கால கடமைகள் குறித்து பேசினார். இதில் நிர்வாகிகள் ராமலிங்கம், குழந்தைவேலு, ராமானுஜம், காந்திமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 இக்கூட்டத்தில், புதுவை அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் வழங்கப்படும் இலவச துணி வகைகளுக்கான ஆர்டரை பாண்டெக்ஸ் மற்றும் பாண்பேப் நிறுவனங்களுக்கு அளித்து கொள்முதல் செய்ய வேண்டும் என சுற்றறிக்கை மூலம் அரசு அறிவுறுத்தி இருந்தது. அந்த சுற்றறிக்கையை அரசாணையாக வெளியிட வேண்டும்.

 நெசவாளர்களுக்கு வேலையில்லா காலங்களில் நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பாண்டெக்ஸ் நிறுவனத்திற்கு அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.10 கோடியையும், பாண்பேப் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.5 கோடியையும் உடனே வழங்க வேண்டும். கைத்தறி, சுதேசி, பாரதி, ஏஎப்டி மில்களை ஒன்றிணைத்து தனித்துறை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

வலியுறுத்தி மார்ச் 9ம் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தொடர் தர்ணா போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

Related Stories: