பூலான்கொல்லை அரசு பள்ளிக்கு குடிநீர் வசதி செய்ய வேண்டும் ஒன்றியக்குழு தலைவருக்கு கோரிக்கை

சேதுபாவாசத்திரம், பிப். 20: பூலாங்கொல்லை அரசு பள்ளிக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டுமென ஒன்றியக்குழு தலைவருக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் அருள்நம்பி கோரிக்கை விடுத்துள்ளார். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கொளக்குடி ஊராட்சியை சேர்ந்த பூலாங்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவை 2018ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி வீசிய கஜா புயலின்போது சேதமடைந்தது. இதனால் கடந்த 15 மாதங்களாக பள்ளி மாணவ, மாணவிகள் குடிநீருக்காக தவித்து வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி குடிநீர் வசதி செய்து தர வேண்டுமென ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அருள்நம்பி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் பள்ளியில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் உடனடியாக குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று உறுதியளித்தனர்.

Related Stories: