காரியாபட்டி அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் செயல் விளக்கப் பயிற்சி

காரியாபட்டி, பிப். 20: காரியாபட்டி அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி நடைபெற்றது. காரியாபட்டி அருகே சிஇஓஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் விபத்தில் சிக்கியோருக்கு முதலுதவி அளிப்பது குறித்து விளக்கமளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர் மகேஸ்வரி, தாமோதரக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, இருசக்கர வாகனத்தில் வந்து விபத்தில் சிக்கி கை, கால், தலை உள்ளிட்ட பகுதியில் காயம் ஏற்பட்டவருக்கு, கட்டு போட்டு, ஆம்புலன்ஸ் ஸட்ரச்சரில் தூக்கி வைப்பது எவ்வாறு என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதில் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் ஜெனிதா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சங்கீதா, காரியாபட்டி அன்னைதெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் செயலாளர் அருண்குமார் மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: