அவிநாசியில் ரூ.54.14 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, பிப். 20:  அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடத்தது நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 3595 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், டி.சி.எச். ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6000 முதல் ரூ.6700 வரையிலும், ஆர்.சி.எச். பிடிரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4500 முதல் ரூ.6300 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2000 வரையிலும் ஏலம் போனது.இதில், மைசூர், கொள்ளேகால், சத்தியமங்கலம், சேவூர், குன்னத்தூர், அன்னூர், மேட்டூர், தஞ்சாவூர், பேராவூரணி, தர்மபுரி, ஆத்தூர், பென்னாகரம்,  கிணத்துக்கடவு, கோபி, நம்பியூர், புளியம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து 446 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து  38 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர். இதில் மொத்தம் ரூ. 54.14 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.  சென்ற வாரத்தைவிட, இந்தவார ஏலத்தில், வரத்து 1000 மூட்டைகள் அதிகரித்து இருந்தது. பருத்தி விலையும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 500 வரை பருத்தி விலை அதிகரித்து இருந்தது.  இந்த தகவலை அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: