உடுமலையில் திருக்குறளை கர்நாடக இசையில் பாடி அசத்தும் பள்ளி மாணவி

உடுமலை, பிப். 20:  திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி. புரத்தில் வசித்து வருபவர் சார்நிலை கருவூல அதிகாரி முத்துக்குமார். இவரது மனைவி சத்தியபாமா. இவர்களது மகன் இலக்கியா உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இலக்கியா கர்நாடக இசையில் திருக்குறள், திருப்பாவை பாடல்களை வடிவமைத்து பாடி அசத்தி வருகிறார். 250 மேற்பட்ட திருக்குறளுக்கு தற்சமயம் அவர் இசை வடிவம் கொடுத்து பார்க்காமல் பாடுகிறார். திருப்பாவையில் 30 பாசுரங்களில் உள்ள பாடல்களுக்கு இசை வடிவம் கொடுத்துள்ளார்.

இது பற்றி இலக்கியா கூறும்போது, இசைபயிற்சி பெற்றதும் எனது இசையாசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசீர்வாதத்துடன் திருப்பாவை பாடல்களை கோவில் மேடையில் பாடினேன். பின்னர் திருப்பாவை பாடல்களுக்கு இசை வடிவம் அமைத்து பாடினேன். 30 பாசுரங்களில் உள்ள அனைத்து பாடல்களையும் பாடினேன். இதேபோல திருக்குறளில் உள்ள 250க்கும் மேற்பட்ட குறள்களுக்கும் இசை வடிவம் கொடுத்து பார்க்காமல் பாடி வருகிறேன். மிக விரைவில் 1330 குறள்களுக்கும் இசை வடிவம் கொடுத்து பாடுவேன். எனது பெற்றோர், பாட்டிகள் சண்முகவள்ளி,  செல்லம்மாள், நூலகர் கணேசன், பள்ளி நிர்வாகத்தினர் ஊக்கமளித்து வருகின்றனர். இவ்வாறு இலக்கியா கூறினார்.

Related Stories: