கல்லூரி கல்வி இணைஇயக்குநரக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பேட்டை,பிப்.18: திருச்சியில் அரசு ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டதை கண்டித்து பேட்டையில் கல்லூரி கல்வி இணைஇயக்குநராக ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இருவரை இணை இயக்குநர் அவதூறாக பேசி தாக்கியதோடு நீண்ட கால விடுப்பில் செல்ல உத்தரவிட்டதை கண்டித்து நெல்லை கல்லூரி கல்வி இணை இயக்குநரக ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்பாட்டத்திற்கு கண்காணிப்பாளர் செந்தில் கண்ணன் தலைமை வகித்தார். உதவியாளர் ரெஜில்ராஜ் வரவேற்றார். கண்காணிப்பாளர் ஹரி முன்னிலை வகித்தார். பதிவறை எழுத்தர் அமிமாஸ் வின்ஸ்டன் செல்வின், உதவியாளர் தஸ்லீமா பேகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில அரசு ஊழிய சங்கத்தலைவர் பார்த்தசாரதி கண்டன உரையாற்றினார். ஆர்பாட்டத்தில் திருச்சியில் அரசு ஊழியர்களை தாக்கிய இணை இயக்குநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், புதிய இணை இயக்குநர் நியமிக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நெல்லை கல்லூரி கல்வி இணை இயக்குநரக அலுவலக நலச்சங்க ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். உதவியாளர் சுஹிதா பேகம் நன்றி கூறினார்.

Related Stories: