பாதுகாப்பு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை

புதுச்சேரி, பிப். 18: துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுச்சேரியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆலோசனை நடத்தினார்.புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகிற 26ம்தேதி புதுச்சேரி வருகிறார். அவரது வருகையையொட்டி காலாப்பட்டில் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக காவல் துறை அதிகாரிகளுடன் டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா நேற்று தனது அலுவகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் மற்றும் அனைத்து காவல் பிரிவுகளின் எஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

இதுதவிர காரைக்கால், மாகே, ஏனாம் காவல் சரகத்தில் இருந்து சீனியர் எஸ்பியும், எஸ்பிக்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் துணை ஜனாதிபதி புதுச்ேசரி வருகைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும், சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்தும் அவர் காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக தெரிகிறது.இதனிடையே உறவினர்களால் கைவிடப்பட்டு பெரியார் நகரில் ரோட்டில் வீசப்பட்ட முதியவருக்கு உணவு வழங்கி காப்பகத்தில் சேர்த்த உருளையன்பேட்டை காவலர்கள் மோகன், அண்ணாதுரை இருவரையும் டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா தனது அலுவலகம் வரவழைத்து பாராட்டினார்.

Related Stories: