98 செவிலிய அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

புதுச்சேரி, பிப். 18: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றி வந்த 98 செவிலிய அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, சமுதாய நலவழி மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வந்த 98 செவிலிய அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை சிறப்பு பணி அலுவலர் தில்லைவேல் பிறப்பித்துள்ளார். மேலும் அந்த உத்தரவில், மாற்று நபர் வரும் வரை காத்திருக்காமல் இவர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு எந்த விடுப்பும் வழங்க கூடாது. எந்த காரணத்திற்காகவும் பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: