அமராவதி வனச்சரகத்தில் வன விலங்குகளுக்கு தண்ணீர்

உடுமலை,பிப்.18:உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. புல் பூண்டுகள் காய்ந்து விட்டன. இதனால் வன விலங்குகள் தண்ணீருக்கு அலைபாய்கின்றன. யானைகள் மூணாறு ரோட்டுக்கு வருகின்றன. வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் வகையில் வனத்தில் ஆங்காங்கே வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது அந்த தொட்டிகளில் வனத்துறையினர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்புகின்றனர். மேலும் மோட்டார் மூலம் தண்ணீர் பெற்றும் தொட்டிகளில் நிரப்புகின்றனர். இவற்றை வன விலங்குகளின் பருகி வருகின்றன. கோடை முடியும் வரை தண்ணீர் நிரப்பப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: