வேலைவாய்ப்பு முகாமில் 296 பேருக்கு பணி நியமன ஆணை

தேனி, பிப். 17: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தேனியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 296 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, கரூர், சேலம், கன்னியாகுமரி, நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட் கார்மென்ட்ஸ், மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் கட்டுமானத்துறை சார்ந்தநிறுவனங்கள் என 62 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இம்முகாமில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்றவர்கள், பட்டயப்படிப்பு, ஐடிஐ, படித்த இளைஞர்கள் என சுமார் 900 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 296 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், இம்முகாமின்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் தொழிற்திறன் பயிற்சி பெற 78 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: