சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியில் குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

ஈரோடு, பிப். 17: ஈரோடு சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியில் குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்ற 152 பேருக்கு பாராட்டு விழா நடந்தது. ஈரோடு சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-2, குரூப்-4, டி.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ். உள்பட அரசு பணியிடங்களுக்கான அனைத்து போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்த 152 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். அவர்களுக்கான பாராட்டு விழா ஈரோடு சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேற்று நடந்தது. விழாவில் அகாடமியின் இயக்குனர் சத்யா, நிர்வாக இயக்குனர் என்.மோகன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Advertising
Advertising

இது குறித்து அகாடமியின் இயக்குனர் சத்யா நிருபர்களிடம் கூறியதாவது: எங்களது அகாடமியில் படித்த 152 பேர் நேர்மையான முறையில் படித்து வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் அரசு அதிகாரிகளாக பணியாற்ற உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சமீபத்தில் பல்வேறு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் போட்டித்தேர்வு பற்றிய சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. ஆனால் உண்மையான முறையில் படித்து நேர்மையான அதிகாரிகளாக எங்களது அகாடமியில் படித்தவர்கள் உருவாகி உள்ளனர். எனவே இளைஞர்கள், இளம்பெண்கள் எந்தவொரு தயக்கமும் அடைய தேவையில்லை. நேர்மையாக படித்தால் அரசுப்பணியை பெறுவது நிச்சயம்.

குரூப் 4 தேர்வில் முறைகேட்டை தவிர்ப்பதற்காக ஓஎம்ஆர் விடைத்தாளில் கைரேகை பதிவு, விடைத்தாள் அடையாளம் காணாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: