கும்பகோணத்தில் பன்னாட்டு கருத்தரங்கம்

கும்பகோணம், பிப்.17: கும்பகோணத்தில் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் சார்பில் சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கு நிகழ்ச்சியில், மைய ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி வரவேற்றார். நிர்வாகி பெரியசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சம்பத்குமார் மற்றும் லதாசந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிவாசகம் கருத்தரங்கம் நோக்கவுரையாற்றினார். சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பில், திருவையாறு முன்னாள் அரசர் கல்லூரி முதல்வர் சண்முகசெல்வகணபதி சிறப்புரையாற்றி, கருத்தரங்க நூலை வெளியிட்டார். நூலை இலங்கை, கிழக்கு பல்கலைகழக சுரேந்திரா-நரேந்திரா மற்றும் சென்னை டாக்டர் அருள்தமிழ் கல்வி அறக்கட்டளை தலைவர் சங்கர் ஆகியோர் பெற்று கொண்டனர். துணை செயலாளர் நாராயணன் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: