வாழப்பாடியில் தேமுதிக கொடியேற்று விழா

வாழப்பாடி, பிப்.13: வாழப்பாடியில் தேமுதிகவின் 20ம் ஆண்டு  கொடி அறிமுக நாளை முன்னிட்டு வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட், ஆத்துமேடு காமராஜர் நகர், புதுப்பாளையம், பெரியசாமி நகரில் தேமுதிக கொடியேற்று விழா நடந்தது. வாழப்பாடி நகரச் செயலாளர் கேபிள் முத்து தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கபட்டது. வாழப்பாடி நகரச்செயலாளர் கேபிள் முத்து, புதுப்பாளையம் அரசு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். பொருளாளர் கார்த்திகேயன், மாவட்ட நிர்வாகி தங்கராஜ், நகர நிர்வாகிகள் வேல்முருகன், குணசேகரன், பாலகிருஷ்ணன், மோகன்குமார், பாபு, மணிகண்டன், பழனிபாரதி, சங்கர், தர்மராஜ், மாரிமுத்து, ஆறுமுகம், வெங்கடேஷ், மணி, சீனிவாசன், சதீஸ்குமார், மன்னரசன், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: