மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு

காங்கயம்,பிப்.12:காங்கயம் ஒன்றியம்  கீரனூர் ஊராட்சி உட்பட்ட சுள்ளிவலசு, சென்னிமலைபாளையம் காலனியில் 175 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது. குடிநீர் தேவையைப் போக்க மாவட்ட ஊராட்சி மாநில நிதிகுழு மானியம் திட்டத்தின் கீழ் இரு கிராமத்திற்கும் தலா ஒரு குடிநீர் மேல்நிலை தொட்டி ரூ.15 லட்சம் செலவில் கட்டும் பணி நடைபெற்றது. 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி பணிகள் கடந்த மாதம் நிறைவு பெற்றது. குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இதற்கு காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்குமார் திறந்து வைத்தார். இதில் கீரனூர் ஊராட்சி தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய துணை சேர்மன் ஜீவிதா ஜவஹர், மாவட்ட கவுன்சிலர் கற்பகம் ஜெகதீஸ், காங்கயம் பீ.டி.ஓ. ரமேஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: