திருப்பூர்,பிப்.12:திருப்பூர், ஜீவா நகரில் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடத்தை மீட்டு தரக் கோரி ஜீவா நகர் வீட்டு உரிமையாளர் நல சங்கத்தினர் நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் ஜீவா நகரில் ஆசர்மில் தொழிலாளர்களின் சங்கம் மில் தொழிலாளர்களின் வீட்டு வசதிக்காக 1960ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு, 112 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனிடையே சங்க உறுப்பினர்கள் பொது உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சங்க உறுப்பினர்களின் நிதி உதவியுடன் கோவை மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று கடந்த 2005ம் ஆண்டு அங்கு திருமண மண்டபம் மற்றும் கோயில் கட்டப்பட்டது. மேலும் 2007ம் ஆண்டு கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனிடையே கடந்த 2010ம் ஆண்டு சங்கத்தை சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இந்த சங்கத்தை கலைத்து விட்டார்.
