சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

செஞ்சி, பிப். 12:  செஞ்சியை அடுத்த மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும் இன்று (12ம் தேதி) வேட்டவலத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இது குறித்து சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோவிற்கு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில் செஞ்சி சமூக நல அலுவலர் பிரபாவதி, கண்டாச்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் பிரபு ஆகியோர் நேற்று காலை சிறுமியின் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு அறிவுரை கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை சமூக நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதனால் இன்று நடைபெற இருந்த மைனர் பெண் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: