காரில் மது கடத்தியவர் கைது

மேல்மலையனூர், பிப். 12:  விழுப்புரம்  மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  ஏதுவாய்பேட்டை கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை (52 )என்பவர்  வெளிமாநில மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில்  ஈடுபட்டிருந்தனர்.

Advertising
Advertising

அப்போது அண்ணாதுரை காரில் கடத்தி வந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம்  மதிப்புள்ள 2075 குவாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும்  கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து  அவலூர்பேட்டை போலீசார் அண்ணாதுரை மீது  வழக்கு பதிவு செய்து  விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: