நரிக்குடி அருகே கோயில் கோபுர கலசம் திருட்டு பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சுழி, ஜன.31: நரிக்குடி அருகே  கோபுர கலசம்  திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நரிக்குடி அருகே முக்குளம் அரியகுளம் என்ற வந்தவாசி கிராமத்தில் ஸ்ரீவாலகுருநாதன் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு  இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு வழக்கம்போல வருஷாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட  நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு  முன்பு கோபுரத்தில் உள்ள கலசம் திருடு  போய்விட்டது. இச்சம்பவம் குறித்து கோயில் உறவின் முறை அறக்கட்டளை சார்பாக முக்குளம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். மேலும் இதுவரை காவல்துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

Related Stories: