டெங்கு கொசுவை ஒழிக்க நடவடிக்கை

புதுச்சேரி, ஜன. 30:  புதுச்சேரி குயவர்பாளையம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்திற்குட்பட்ட சாரம் தென்றல் நகரில் தீவிர டெங்கு கொசு உற்பத்தி ஒழிப்பு நடவடிக்கை மலேரியா உதவி இயக்குநர் கணேசன் தலைமையில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சாரம் தென்றல் நகரில் மருத்துவர் கணேசன் வீடு வீடாக சென்று டெங்கு கொசு உற்பத்தியாகும் தேவையற்ற பொருட்களான தேங்காய் மட்டை, ஆட்டுரல், பிளாஸ்டிக் கப், டயர், வீட்டினுள் பயன்படுத்தும் பிரிட்ஜ் பின்புறம் உள்ள ட்ரே ஆகியவற்றில் நீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறும், தேவையற்ற பொருட்களை உடனே அப்புறப்படுத்தும் மாறும், பொதுமக்களுக்கு ஒரு நாள் காய்ச்சல், தலைவலி, உடம்புவலி இருந்தாலும் அருகிலுள்ள அரசு சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தை அணுகுமாறும் கேட்டுக் கொண்டார்.

 மேலும் டெங்கு காய்ச்சல் குறித்த  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் பொதுமக்களுக்கு டெங்கு அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அணுகி  ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் சுகாதார உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், வெங்கட்ரமணன் ஆகியோர் கலந்துகொண்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Related Stories: