சாத்தூர், ஜன.30: எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் அருகே சங்கரமூர்த்திபட்டி கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை சாத்தூர் எம்எல்ஏ எம்எஸ்ஆர்.ராஜவர்மன் துவக்கி வைத்தார். முகாமில் காது, மூக்கு, தொண்டை நோய்கள், கண் மருத்துவம், பல் நோய்கள், நுரையீரல் நோய்கள், இருதய நோய்கள், நரம்பியல் நோய்கள், காசநோய் மற்றும் தொழுநோய் போன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.