சமாதானபுரம் குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு

ஓசூர், ஜன.29: ஓசூர் மாநகராட்சி தர்கா அருகில் உள்ள சமாதானபுரம் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஓசூர் எம்எல்ஏ சத்யா திறந்து வைத்தார். ஓசூர் மாநகராட்சி தர்கா அருகில் உள்ள சமாதானபுரம் சமாதானபுரம் பகுதியில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில்,கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம், நகராட்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். ஓசூர் எம்எல்ஏ சத்யா கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் 32 கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது போல் நகராட்சியில் உள்ள தனியார் குடியிருப்புகளில் சிசிடிவி கேமிராக்கள் அமைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். இதனால், குற்ற செயல்கள் தடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் நவீன், துணை அமைப்பாளர் ஸ்ரீலட்சுமி, வார்டு செயலாளர் அரசனட்டி ரவி, சமாதானபுரம் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் ரகுபதி, நாராயணனசாமி, சந்திரசேகர், உமா, சுஜாதா, கவிதா, மலரவாசகன், நித்யா, பிரசன்னா, ஜெயபிரகாஷ், சின்னப்பா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: