காரைக்காலில் பைக் திருடிய 4 பேர் சிறையில் அடைப்பு

காரைக்கால், ஜன. 28: காரைக்கால் பைபாஸ் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு, காரைக்கால் நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் அலாவுதீன், ராமசாமி  மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த 4 பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதையடுத்து,  அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

Advertising
Advertising

விசாரணையின் முடிவில், நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த முகமது ரிஸ்வான் (40), விருதுநகர் மாவட்டம் திருச்சூழி வீரசோழன் பகுதியை சேர்ந்த நேசம்பாபு (39), தமீம் அன்சாரி (31), அப்துல் ரகுமான் (25) என்பதும், இவர்கள் 4 பேரும், கடந்த சில நாட்களாக காரைக்காலில் பைக்குகளை திருடியதையும்  ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர், 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

Related Stories: