தேனியில் 200 கிலோ பாலித்தீன் பை பறிமுதல்

தேனி, ஜன. 24: தினகரன் செய்தி எதிரொலியாக தேனி நகரில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி 200 கிலோ எடையுள்ள பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர். தேனியில் கிராமங்களில் இருந்து சிலர்் வந்து பாலித்தீன் பைகளை விற்பனை செய்கின்றனர். சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் தடை செய்யப்பட்டு ஓராண்டை கடந்தும் தேனியில்  பாலித்தீன் பயன்பாடு குறையவில்லை. இதுகுறித்து தினகரனின் நேற்று செய்தி வெளியானது.

இதனைத தொடர்ந்து நேற்று நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து, பாலமுருகன், தர்மராஜ், சுருளியப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் தேனியில் நேற்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம் 16 கடைகளிலும், குடோன்களிலும் ஆய்வு செய்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர். மொத்தம் ஒரே நாளில் 36 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதித்தனர். இந்த பைகளை அரசு வழிகாட்டிய நெறிமுறைப்படி பாதுகாப்பான முறையில் அழிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இனிமேல் யாராவது சிக்கினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

Related Stories: