காரியாபட்டியில் எம்ஜிஆர் பிறந்த தின விழா

காரியாபட்டி, ஜன. 23: காரியாபட்டியில் முன்னள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த தின விழா நடந்தது. பொதுகுழு உறுப்பினர் பழனி தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியச் செயலாளர் தோப்பூர் முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடியும், துணைமுதல்வர் ஓபிஎஸ்சும் ஏராளமான திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கி வருகின்றனர். எம்ஜிஆர் ஆட்சியில் கிராமங்களுக்கு குடிநீர், சாலை வசதி செய்து தரப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்யப்பட்டது. மற்ற மாநிலங்கள் போற்றும் வகையில் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருகின்றது. தொடர் வளர்ச்சி காரணமாக மத்திய அரசின் பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தின் 50 ஆண்டுகள் கோரிக்கையான மெடிக்கல் காலேஜ் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடியாரின் கோரிக்கையை ஏற்று விருதுநகரில் 300 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராமமூர்த்திராஜ், மாவட்ட அதிமுக பொருளாளர் கே.பி.தேவர், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சின்னபோஸ், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் அபிஷேக் ஆதித்தன், செட்டிக்குளம் ஊராட்சி மன்றதலைவர் வேங்கைமார்பன், ஒன்றியக்கவுன்சிலர் திருச்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: