சேந்தமங்கலம் அருகே அரசு கல்வியியல் கல்லூரிக்கு பெண் முதல்வர் பொறுப்பேற்பு

குமாரபாளையம், ஜன.23: குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியின், முதல் பெண் முதல்வராக பேராசிரியர் கலைச்செல்வி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். குமாரபாளையம் அரசு கல்வியில் கல்லூரி, கடந்த 1955ல் துவங்கப்பட்டது. கடந்த 64 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பயிற்சி பெற்று, கல்விப்பணியில் உள்ளனர். இந்த கல்லூரியில் இது நாள் வரை 35 பேராசிரியர்கள், முதல்வராக பணியாற்றியுள்ளனர். இதன் 36வது கல்லூரி முதல்வராக பேராசிரியர் கலைச்செல்வி பதவியேற்றுக் கொண்டார்.  இதன் மூலம், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். இவர் கடந்த 1996ல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம், ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தமிழ் துறை விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். இதை தொடர்ந்து சேலம் அரசு கலைக்கல்லூரி, குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றியுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு, பேராசிரியர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: