எஸ்பி அலுவலகத்தில் புகார்

விருதுநகர், ஜன. 21: ராஜபாளையம் அருகே, முதுகுடி கிராமத்தில் உள்ள அருந்ததியர் மக்கள், விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: முதுகுடியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் உள்ளோம். மாற்று சமூகத்தினர் 800 குடும்பங்கள் உள்ளனர். சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த நிலையில், சில நபர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல், இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 16ம் தேதி அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த நபரை, அதே பகுதியை சேர்ந்த சேரன் என்பவர் போதையில் தள்ளிவிட்டார். அதை தொடர்ந்து அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்து அச்சுறுத்தும் வகையில் மிரட்டினார். இது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் அளித்து வழக்குப்பதியப்பட்டது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால் மர்மநபர்கள் தொடர்ந்து அருந்ததிய மக்களை அச்சுறுத்தி வழக்கினை வாபஸ் பெறவில்லையென்றால், ஊரை விட்டு விரட்டி விடுவோம் என மிரட்டுகின்றனர். சேரன் மீது உரிய நடவடிக்கை எடுத்து மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: