வாழப்பாடி அருகே தடையை மீறி மீண்டும் வங்காநரி ஜல்லிக்கட்டு

வாழப்பாடி, ஜன.21: வாழப்பாடி அருகே கொட்டவாடி கிராமத்தில் தடையை மீறி மீண்டும் வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்திய 11பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 18ம் தேதி, தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, வங்காநரியை பிடித்த 11பேர் மீது வழங்குப்பதிவு செய்து, ₹55ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்நிலையில், வாழப்பாடி அருகே கொட்டவாடி கிராமத்தில், மாரியம்மன் கோயில் வளாகத்தில், 2வது முறையாக தடையை மீறி மீண்டும் வங்காநரி ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இது குறித்த தகவலின் பேரில், வாழப்பாடி வனவர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வங்காநரியை மீட்டு, கொட்டவாடி வனப்பகுதியில் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வங்காநரியை பிடித்து வந்ததாக, அதே பகுதியை சேர்ந்த 11பேர் மீது வனத்துறையினர் வழகு–்குப்பதிவு செய்தனர்.

Related Stories: