அரியலூர் பள்ளியில் பிரதமர் மோடியின் உரையை நேரலையில் பார்த்த மாணவிகள்

அரியலூர்,ஜன.21: டெல்லியில் பிரதமர் மோடி, மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடிய நிகழ்ச்சியை பள்ளி மாணவிகள் நேரலையில் கண்டுகளித்தனர். பிரதமர் நரேந்திர மோடி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களுடன் “பரீக்ஷா பே சர்ச்சா” என்ற பெயரில் கலந்துரையாடும் நிகழ்ச்சியை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார். 3-ம் ஆண்டுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லி தல்கத்தோரா மைதானத்தில் நேற்று காலை 11 மணி முதல் 12 மணிவரை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, தேர்வு சமயத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவது எப்படி என்பது குறித்து விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை, அரியலூரில் உள்ள நிர்மலா பெண்கள் (அரசு உதவி பெறும் பள்ளி) மேல்நிலைப்பள்ளியில் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி சிறப்புத்திரை மூலம் 9-ம் வகுப்பு முதல், பிளஸ்2 வரை பயிலும் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. பிரதமர் மோடி ஹிந்தியில் பேசியதை மாணவிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் விளக்கி கூறினர்.

Related Stories: