செங்கம் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் அரசு மதுபான விற்பனை படுஜோர்

செங்கம், ஜன.21: செங்கம் பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் அரசு மதுபான விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என குற்றச் சாட்டு எழுந்துள்ளது. செங்கம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளது. பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு போட்டியாக செங்கம் டவுன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இரவு பகல் பாராமல் அரசு மதுபானங்கள் பதுக்கி வைத்து பெட்டி கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதுமட்டும் இன்றி நேரம் காலம் இன்றி விற்பனை செய்வதால் குடி மகன்கள் போதையில் சுற்றி வருவது, பொதுமக்களிடம் தகராறு செய்வது, குடித்து விட்டு இரு சக்கர வானங்களில் சென்று விபத்து ஏற்படுத்துவது போன்ற பல்வேறு பிரச்னைகள் நடந்து வருகிறது.

இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகளோ கண்டும் காணமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாவட்ட டாஸ்மாக் நிர்வகாம் தனி கவனம் செலுத்தி முறையாக அரசு மதுபானங்கள் விற்பனை செய்து அரசுக்கு வருவாய் இழப்பை தவிர்க்க நடிவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்று அனுமதியின்றி விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: