1.29 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்

சிவகங்கை, ஜன.20:  சிவகங்கை மாவட்டத்தில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், நகர் நல மையம், அங்கன்வாடி, பள்ளிகள் உள்பட ஆயிரத்து 192 நிரந்தர மையங்கள், 61 நடமாடும் குழுக்கள், 17 பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேசன் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 270 மையங்களில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 131 குழந்தைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் 702 குழந்தைகளுக்கு நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் சுகாதாரம், மருத்துவம், கல்வி, வருவாய், நகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த 5 ஆயிரத்து 500 அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் முகாமை தொடங்கி வைத்தார். கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார்.

Related Stories: