காங்கயம் - பழனி நெடுஞ்சாலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்

காங்கயம், ஜன. 19:  பழநி முருகன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து தங்கள் ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக காவடி சுமந்து சென்று நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். இதில் பாதயாத்திரையாக தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் பாதயாத்திரையாக காங்கயம் வழியாக நடந்து செல்வது வழக்கம்.இந்த ஆண்டும் லட்சக்காணக்கான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட காவடி, முருகன் சிலைகளுடன், பாடல்பாடி, பாதயாத்திரையாக கடந்த மூன்று நாட்களாக அதிக அளவில் சென்ற வண்ணம் உள்ளனர். திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் - தாராபுரம் வரை உள்ள சாலையில் சாரை சாரையாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க சாலையோரங்களில் 3 கி.மீ. தூரத்திற்கு சாமியான கூடங்களை அப்பகுதி முருக பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அமைத்துள்ளனர்.இதில் கடந்த 3 நாட்களாக காலை, மதியம், இரவு என மூன்று நேரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தனர். இதனால் அப்பகுதி சாலை அன்னதான சாலையாகவே காட்சியாளிக்கிறது. முருக பக்தர்கள், அன்னதானம் வழங்கியவர்களை வாழ்த்தி செல்கின்றனர்.

Related Stories: