10ம் வகுப்பு மாதிரி வினா விடை புத்தகம் அரசு மகளிர் பள்ளியில் விற்பனை

ஈரோடு, ஜன. 19:  10ம் வகுப்பு மாதிரி வினா விடை புத்தகம் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் வாங்கி பயன்பெறலாம் என பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. ஏற்கனவே, காலாண்டு  மற்றும் அரையாண்டு தேர்வுகள் மட்டுமின்றி திருப்புதல் தேர்வுகளும் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 10ம் வகுப்பு மாதிரி வினா விடை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை தாங்கி வினாவிடை புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழியிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை சென்னை அரசு தேர்வு துறை வளாக ஆலோசக அலுவலகம் உருவாக்கி உள்ளது. ஈரோட்டில் இந்த புத்தகம் காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விற்பனை செய்யப்படுகிறது. கணிதம் வினா விடை புத்தகம் ரூ.80க்கும், பிற பாட வினா விடை புத்தகங்கள் ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: